Hello all,
Sharing the pointers on the session “OWN YOUR LIFE – Discover the route to Emotional Mastery – – An Exclusive session for parents of children with special needs steered by Kirtanya” organized by VOICE parents community. This was my first time attending a session organized by VOICE (Voice of parents For Inclusion Care and Empowerment). Their WhatsApp group is very active, filled with so much information, tips, point of contacts, personal experiences etc.. that are very much needed for taking care of your child.
The session happened in LIBA, No.1, Mahalingapuram Road, Nungambakkam, Chennai – 34, the speaker was Kirtanya from Mindfresh, on Sunday 16th June 2019 from 5 pm to 7 pm (Yes …! During the Ind vs Pak cricket match). The venue had multiple entry points, the backside entrance of Loyola College minimizes the walking time to the hall. There was a delay in starting the session due to people arriving from various entry points, as they have to make a long walk. Volunteers were arranged to take care of the kids, it was a simple registration process, kids were taken care well, and welcome drinks (tea/coffee) with snacks (biscuits) were provided to all. Around 50 participants attended this session. The venue was Air conditioned.
The session is not a PowerPoint deck or videos kind of one, it was a full on interactive workshop with occasional videos or Music. As south Indians many of us are not used to speak in the crowd until we are familiar with all/most of them, we wait for someone or let someone else to take the turn but Kirtanya did ensure that does not happen, she kept poking and did her best to make almost everyone participate. The infrastructure was challenging for her, as her movements were restricted. This was my first time listening to her, she was not boring, she connected to everyone in the room, her eye contact was very good …needless to say about the expertise on local language (மெட்ராஸ் பாஷை)
Prior to the start one of the special parent, Lakshmi Balakrishnan spoke about her book being available for sale at the stall, for interested people. Her kid wanted to sing a song, but got a mood shift, was not interested later. Her book titled “எழுதாப் பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம்” costs Rs.100. (Bought this one after the session ended)
Mala gave the below introduction:
Warm welcome to all of us…. Needless to say Chennai is Warm all the time now…… Special Welcome on Guys in spite of an Indo Pak world cup cricket match going on live (Kirtanya commenting … athai vera yen nyabaga paduthareenga ..) Speaker Kirtanya is the close friend of mine, she is a powerful speaker and persuasive speaker, Author, Entrepreneur she runs Mindfresh, she works with young adults from the age group of 13 to 21, age they are most vulnerable. This session was arranged as a result of recent sad incident happened to a voice member, we lost one of our fathers. Some of the parents have difficulty in coping with the situation, this session should throw some light and helps us travel on the right direction. We are lucky that Kirtanya was free today, usually her weekends are extremely busy…. thank her for making time for us. Please keep Mobiles on silent and Use rear exist if you wanted to step out.
Kirtanya took over…
(I wanted to share this in English, but I worry it would not have the same impact when translated. Hence I decided to share the details of her speech in Tamil, so that the meaning is intact and no words are misrepresented. Would use English wherever she used it )
வணக்கம் …. (சில பேர் மட்டும் தான் பதில் வணக்கம் சொன்னாங்க) Sunday பிரியாணின்னு நல்லா தெரியுது. எப்படி போய்கிட்டு இருக்கு வாழ்க்கை ?
பெற்றோர்களின் பதில்கள்:
- சிறப்பு
- போராட்டத்தோட போய்கிட்டு இருக்கு, அதை சமாளிக்கிற தெம்பும் கூடவே இருக்கு
(கொஞ்சும் நேரம் அமைதி …)
படுக்க போட்டு கும்முகும்முங்குதா ? உங்களுடைய பங்களிப்பு (Participation) எனக்கு கட்டாயமா தேவை… நான் சொல்றதை எல்லோரும் சொல்லுங்க ” நாங்க, the great special parents கேள்வி கேட்டா பதிலே சொல்ல மாட்டோம்”
பெற்றோர்களின் பதில்கள் (தொடர்ச்சி):
- கவலைகளை யார்கிட்டேயாவது கொட்ட முடியுமா, யாராவது தீர்வு கொடுக்க மாட்டாங்கள்னு தேடிகிட்டு அலையறோம்
- இப்போவே கண்ணை கட்டுதே
- குழப்பமா இருக்கு, ஓடிகிட்டுதான் இருக்கோம், திடீர்னு யோசிக்கிறோம், சரியாத்தான் ஓடுறோமா இல்லையானு
- ஒவ்வொரு நாளும் சவாலானதாக இருக்கு
- தேடலாவே போய்கிட்டு இருக்கு வாழ்க்கை, எப்போ பேசுவான், எப்போ சிரிப்பான், எப்போ மத்த குழந்தைங்க கூட விளையாடுவான்
- எதிர்கால வாழ்க்கை பற்றிய கவலை
பெற்றோர்களின் பதில்கள் ஆண்கள் / தகப்பனார்கள் (தொடர்ச்சி):
- கடவுள் காட்டுற பாதை நோக்கி பயணம் பண்ணுறோம்
- நிகழ்காலம் இறுக்கமா இருந்தாலும், எதிர்காலம் நம்பிக்கை அளிக்க கூடியதா இருக்கும்னு நம்புறோம்
- பிரச்னை இல்லாத குடும்பமே இல்லை, எனக்கு இந்த பிரச்னை
இந்த காலத்துல குழந்தைகளை வளர்கிறத விட ஒரு கொடுமையான விஷயம் கிடையாது. நீங்க சொன்ன அதே பதில்களை தான், என்னோட மற்ற சந்திப்புகளில் சாதாரணமான குழந்தை வெச்சிருக்கிறவங்களும் சொல்றாங்க. அதனால எந்த மாதிரியான குழந்தைகளுக்கு நீங்க பெற்றோர் என்பது முக்கியமே இல்லை.
6000 கோடி மதிப்புள்ள ZOHA நிறுவனத்தின் முதலாளி ஸ்ரீதர் வேம்பு, தன்னுடய 13 வயது மகன் முதல் முறையாக இன்று டா டா சொன்னதால் அடைந்த மகிழ்ச்சி, நான் சம்பாதித்த பணம் எனக்கு கொடுக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். எல்லோருக்கும் கவலை, பிரச்சனைகள் என்பது இருக்கு.
அடுத்த ஒரு மணி நேரத்துக்கான விதிமுறைகள் :
1. என்னை Free-யா பேச விடணும், நான் என்ன வார்த்தை பேசறேன்னு பார்க்காம, என்ன விஷயம் சொல்றேன்னு கவனிக்கணும். எனக்கு சென்னை தமிழ் தான் வரும், இலக்கிய தமிழ் எதிர்பார்க்காதீங்க …ஒரு விஷயம் எப்படி சொன்னா உள்ளே இறங்குமோ, அப்படி தான் நான் சொல்லுவேன், உங்க மனசு சங்கடப்படுமேனு வார்த்தைகளை தேடி பொறுக்கி பேச மாட்டேன். Deal or NO Deal ….. பெற்றோர்களின் பதில் – DEAL. மனுஷன்னா வார்த்தைய கொடுக்கக்கூடாது அப்படி கொடுத்துட்டா மீற கூடாது.
மாலா, பின்னாடி யாராவது வந்து ஏதாவது சொன்னாங்கன்னா என்கிட்டே சொல்லணும்
2. பக்கத்துல இருக்கிறவங்க தலை மேல வெடிகுண்டே விழுந்தா கூடா திரும்பி பார்க்க கூடாது… நான் சொல்றது எல்லாம் உங்கள் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறவங்களுக்கு மட்டுமே … பக்கத்துல இருக்கிறவங்களை இடிச்சி “உங்ககிட்டே தான் சொல்லறாங்க”னு சொல்லாம, என்னைய மட்டும் கவனீங்க
She showed a slide in the projector, which looks like the below one (not the exact one):

இந்த ரெண்டு Circles பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும், அதுல ஒன்னு சிறியது, இன்னொன்னு பெரியது …. Left sideல இருக்கிற Circle பெரியதுன்னு சொல்றவங்க கைய தூக்குங்க (சிலர் தன் கைகளை உயர்த்தினார்கள்) , Right sideல இருக்கிற circle பெரியதுன்னு சொல்றவங்க கைய தூக்குங்க (சிலர் தன் கைகளை உயர்த்தினார்கள்) … நான் சொன்னது பச்சை பொய், ரெண்டு circlesசுமே ஒரே அளவு தான்.
உளவியல் ரீதியா இப்போ இங்க என்ன நடந்ததுன்னு பாருங்க:
குழப்பம் இல்லாம, தெளிவா எல்லோரும் படத்தை பார்த்தீங்க, நான் வந்து கொளுத்திப்போட்டவுடனே தெளிவா இருந்த நீங்க ரெண்டா பிரிஞ்சிட்டிங்க , சிலர் இதுன்னு சொன்னீங்க, சிலர் அதுனு சொன்னீங்க. ஏன் ?
யோசிக்கவில்லை … நான் சொன்ன பொய்ய உண்மைன்னு நம்புனத்தால !
ஒருத்தி வந்து ஒரு பொய் சொன்னதுக்கே நீங்க ஏமாந்த சோனகிரி ஆனீங்கனாக்க … அதே பொய்ய பத்து பேர் அடிச்சு சொன்னா நீங்க என்ன ஆவீங்க?
ஒரே பொய்ய, 100 வருஷமா நம்ம சமுதாயமே சொல்லிக்கிட்டு இருந்துச்சின்னா, ஆட்டு மந்தை புத்தி வெளிபடுமா, இல்லை மனுஷ புத்தி வெளிபடுமா ..? ஆட்டு மந்தை புத்திதானே !
சுயமா யோசிக்கிறதுதானே மனுஷ புத்தி, அது ஏன் வெளிய வரலே ? (ஒரு பெற்றோர் கூறிய பதில் …உங்க மேல உள்ள நம்பிக்கை ! )
நீங்க சொன்ன கவலை, பெரிய Challenge, விரக்தி, இயலாமை … இது எல்லாமே ஒரு உணர்ச்சி ! உணர்ச்சிகள் எதனால வருது? சிந்தனைகள் ….. சிந்தனை மட்டும் காரணம் இல்லை …எல்லா சிந்தனைகளாலும் உணர்ச்சிகள் வருவதில்லை
உதாரணம்: மாலா போட்டுக்கிட்டு இருக்கிற டாலர் பார்க்க அழகா இருக்கு, நல்லா இருக்குங்கிற சிந்தனை தான் வந்துச்சு, உணர்ச்சி வரலேயே
நான் உங்ககிட்ட ரெண்டு Circles காட்டி பொய் சொன்ன போது, உங்க மனசு அதை நம்புச்சு இல்லை, இந்த சமுதாயமும் அந்த மாதிரி பல பொய்களை சொல்லி உங்களை நம்ப வெச்சிருக்கு, எது எல்லாம் நல்லதுன்னு நினைக்கிறோமோ, எதுவெல்லாம் சிறப்புன்னு நினைக்கிறோமோ அதை எப்போ இழந்துட்டோம்னு நினைக்கும்போது தான் அங்கே உணர்ச்சி வரும்
கடந்த 6 மாதத்தில் உங்களுக்குள் அதிகமாக வெளிப்பட்ட உணர்ச்சி எது ? அது எதனால வந்தது ? உங்களுடைய பிரச்சனை எதனால வந்தது … சூழ்நிலையா, மனிதனா, சமுதாயத்தினாலயா?
பெற்றோர்களின் பதில்கள்: விரக்தி, கோபம், சந்தோசம், ஏமாற்றம், இயலாமை, எதிர்பார்ப்பு, ….
- இயலாமை எதனால வந்தது ? நேரமின்மை … அதாவது சூழ்நிலையால் உங்களுக்கு இயலாமை வந்திருக்கு.. இது சூழ்நிலையால வர உணர்ச்சி
- ஒரு மனுஷன் தனக்காக நேரம் ஏற்படுத்திக்க முடியாமா , எல்லா பாரத்தையும் தன் மேல சுமக்கும் போது வருது …இது மனுஷனால வர உணர்ச்சி…
- எதிர்பார்த்த மாதிரி ஒரு விஷயம் நடக்காததுனால வர உணர்ச்சி … அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றாது யாரு …சூழ்நிலையா, வாழ்க்கையா, மனிதனா ?
நமக்கு வாழ்கை இப்படி தான்னு ஓத்துக்கிட்டு இருந்தாலும், மத்தவங்க நம்ம குழந்தைகிட்ட நடத்துகிற முறை வருத்தப்பட வைக்குது … இது உங்களோட இயலாமைனால நடந்துதா, இல்லை கடவுள் உங்களை தாண்டிச்சதா நினைக்கிறீங்களா ?
- மற்ற குழந்தைகளை பார்க்கும் பொழுது, நம்ம குழந்தைகளோட குறைபாடு பெரியதா தெரியுது ….இந்த பிரச்சனை நீங்க உருவாக்கினது… இதுக்கு சமுதாயமோ அல்லது குழந்தையோ காரணம் இல்லை… நீங்க ஒப்பிட்டு பார்த்ததால் ஏற்பட்ட பிரச்சனை …
பிரச்னை எல்லாத்தோட கூட்டா (சூழ்நிலையா, மனிதனா, சமுதாயத்தினாலயா) கூட இருக்கலாம், அப்படி இருந்தால், அதில் எது அதிக ஆதிக்கம் செலுத்துதுன்னு கவனீங்க. ஒரு பெற்றோருக்கு இருக்கும் அதே குறைகள் மற்றவர்களுக்கும் இருக்கும்னு கற்பனை பண்ணிக்க வேண்டாம். ஒவ்வொருவருக்கும் இது வேறுபடும். சுயமதிப்பு பிரச்னையா இருக்கலாம், சமுதாயத்தின் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பிரச்னையா இருக்கலாம், கூட்டுகுடும்பம் பிரச்னையா இருக்கலாம், புரிஞ்சிக்காத அல்லது ஒத்தாசை / உதவாத வாழ்க்கை துணையா இருக்கலாம் …. கொஞ்ச நேரம் எடுத்துக்கிட்டு, உங்களோட பிரச்சனை எதுவோ அதை எழுதுங்க ….
எந்த காரணத்துனால திரும்ப திரும்ப ஓர் உணர்ச்சி உங்ககிட்ட உருவாகுது … அது என்ன உணர்ச்சி …கடந்த 6 மாசத்துல வந்த உணர்ச்சிகளில் மிகவும் ஆதிக்கம் செலுத்திய உணர்ச்சி எது ? அது ஏன் வந்தது ?
ஒரு ஓவியர், படம் வரைய ஆரம்பிக்கும் பொழுது , அவர் என்ன வரைய போகிறார் என்பது, கடைசியாக தீட்டி முடிக்கும் பொழுதுதான் தெரியும் .. இதுவும் அதே மாதிரிதான் …நான் சொல்ற விஷயங்கள் உங்கள் யோசனைக்கு எதிராவோ , ஏற்புடையதா இல்லேயினாலும் …என் கூடவே பயணம் பண்றப்போ , நம்ம எங்கே போய் நிக்க போறோம்னு தெரியும்
- வெள்ளையா இருக்கிறவன் பொய்யே சொல்ல மாட்டான் …. நிஜமாவா ?
- வெள்ளையா இருந்தா அழகு … நிஜமாவா ?
- காசு இருந்தா சந்தோஷமா இருக்கலாம் … நிஜமாவா ?
உங்களுக்கு தெரிஞ்ச பணக்கார நண்பர்கள் எத்தனை பேர் மோசமான மனநிலையோட வஸ்த்துக்கிட்டு இருக்காங்க ? இந்த சமுதாயமே பணத்தை நோக்கி தான் பயணிக்குது
இந்த மாதிரி சமுதாயம் சொல்ற பல பொய்கள்ல பெரிய பொய் என்னவென்றால் “சூழ்நிலைகள் தான் உணர்ச்சிகளை உருவாக்குது “. உண்மை என்னவென்றால், உணர்ச்சிகள் தான் சூழ்நிலைகளை உருவாக்குது. எப்படினு தெரியுமா … தெரிஞ்சவங்க சொல்லுங்க ?
நீங்க எவ்வளவு யோசிச்சாலும், உங்களால் சொல்ல முடியாதுன்னு எனக்கு தெரியும் ….. மிஞ்சிப்போனா என்ன சொல்லிவீங்க ….. எண்ணம் போல் வழக்கை … நீங்க சொல்றது உளவியல் … நான் பேசுறது உயிரியல்
Tasmac கடைய பார்த்திருக்கீங்களா … பார்க்காத நல்ல உள்ளங்கள் யாராவது இருக்கீங்களா ..? ஒரு பெற்றோர் கூறிய பதில், “கடைய வெளியே இருந்து பார்த்திருக்கோம், உள்ளே பொய் பார்த்தது இல்லை “ ….அது வேறவா !!
டாஸ்மாக் வெளிய குப்பைத்தொட்டி இருக்கும் … அதுல பாதி குப்பை வெளிய கொட்டி இருக்கும் …அதுக்கு மேல ஒருத்தன் படுத்திகிட்டு இருப்பான் ..அவன் எடுத்த வந்தியிலேயே அவன் முகம் தரையில பசக்குனு ஒட்டி இருக்கும் ..அவன் ஒரு மொடா குடிகாரன் ….. அவனை விட மஹா கேவலமான குடிகாரர்கள் இங்கே ஒவ்வொரு இருக்கையிலும் அமர்ந்திருக்கிறார்கள் … ஏன் குழந்தை முகத்தை பாருங்க கீர்த்தன்யா, நான் எல்லாம் பீர் கூட ஒரு ட்ரோப் குடிச்சது இல்லை …. என்னை போய் அப்படி சொல்றீங்க
ஒரு பெற்றோரின் பெயர் கேட்டுவிட்டு , “உயிரியல் படி ரத்னா பிரியா தான் உலகத்திலே No. 1 குடிக்காரி “. ஒரு குடிகாரனாவது, வெளிய இருக்கிற சரக்கை குடிச்சிகிட்டு இருக்கான், இங்கே இருக்கிற நீங்க என்னா பண்ணுறீங்கனாக்க, உள்ளுக்குளேயே ஒரு சரக்கு பேக்டரி வெச்சிக்கிட்டு தேவையான பொது எல்லாம் காய்ச்சி காய்ச்சி குடிக்கறீங்க … நம்மளோட சாராயம் என்னது … கோவம், கவலை….
கோவம் என்பது உங்களை பொறுத்தவரைக்கும் ஒரு உணர்ச்சி, மூளையை பொறுத்த வரைக்கும் அது ஒரு ரசாயனம். இயலாமை, அன்பு, அழுகை, காமம் என்பது எல்லாம் நம்மளை பொறுத்த வரைக்கும் உணர்ச்சி, மூளையை பொறுத்த வரைக்கும் அது ஒரு ரசாயனம் ….. கோபத்துக்கு தேவையான அழுத்தம் வரணும்னாக்க, அதுக்கு தேவையான ரசாயனம் சுரக்காம , அந்த அழுத்தம் வராது …
மூலையில் இருக்கும் ஒரு சிறிய உறுப்பின் பெயர் Hypothalamus. ஒவ்வொரு தடவை உணர்ச்சி வரும்பொழுது, ரத்தம் மூலமாக நம்ம அணுக்களுக்குள் இருக்கிற சின்ன சின்ன துவாரங்களுக்குள் இந்த ரசாயனத்தை மூளை அனுப்புகிறது. ஒரு பூட்டுக்கு ஒரு சாவி இருக்கிற மாதிரி , ஒரு அணுக்குள் கோபம் செலுத்தப்பட்டபிறகு , மற்ற உணர்ச்சிகளை அணுக்கள் ஏற்றுக்கொள்ளாது. காலப்போக்கில் எந்த உணர்ச்சி நீங்க அதிகமா வெளிப்படுத்தி இருக்கீங்களோ, அது உங்கள் அணுக்களுக்கு தான் தெரியும் (மூளைக்கு தெரியாது), அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.
3 Short videos of Hypothalamus was showed …Emotions are chemicals, like how people become slaves for liquor, our body craves for the chemicals that is produced by hypothalamus.
எந்த ரசாயனம் அடிக்கடி அணுக்குள் போகுதோ , அணுக்கள் அந்த ரசாயனத்தை விரும்பும், அது கிடைக்க எந்த உணர்ச்சியை தூண்ட வேண்டுமோ அதை செய்யும். அனுக்கள் எந்த ஒரு உணர்ச்சிக்கு அடிமை ஆகுதோ, அதை அடைய என்ன வேணும்னாலும் பண்ணும் (i.e. Addiction). இலட்சியத்தை அடைய செய்ய வேண்டியவற்றை செய்ய விடாமல், எந்த உணர்ச்சி பழக்கமோ, அதை நோக்கியே உடல் செல்கிறது.
(பார்வையாளர்கள் கொஞ்சம் மந்தமாக காணப்பட்டார்கள்)
இனிமே Sunday Afternoon Workshop கிடையாது, Fullலா தளபாக்கட்டு or திண்டுக்கல் பிரியாணியானு தெரியலை
உதாரணம்:
ஒருத்தனுக்கு 10 லட்சம் கடன் இருக்கு, ஆனா அவனுக்கு 10 ஆயிரம் தான் சம்பளம். இப்போ அந்த கடனை அடைகிற வரைக்கும் அவனுக்கு பயம் உணர்ச்சி மட்டுமே இருக்கும்… அந்த கடனை அடைத்த பிறகு, அவனுக்கு சந்தோசம் and நிம்மதி உணர்ச்சிகள் வரணும், அதுக்கு பதிலா அவனுக்கு பழக்க பட்ட பயம் உணர்ச்சி தான் இருக்கும். அதாவது அடுத்த கவலையான விஷயத்தை தேடி செல்வான்.
நீங்க இது வரைக்கும் சொன்ன கவலைகள் எல்லாம், மூளை உங்களுக்கு பின்னிய மாய வலை, இதை அறுத்தெரிவது கடினமானது
Had an activity where we all stood up and danced for Macarina song, to loose our sleepiness
She drew two circles, one representing “What happened” and another for “Story” like below:

இது ரெண்டு உலகம் …. முதல் உலகம் “என்ன நடந்தது?”, இது நடந்த உண்மை சம்பவங்களை குறிக்குது. இரண்டாவது உலகம் “கதை”, இது நடத்த உண்மை சம்பவத்தை பத்தி மனசு கட்டும் கதைகள்.
எல்லோருமே வாழக்கையில் எந்த காலகட்டமானாலும் இந்த ரெண்டு உலகத்தில் எதாவது ஒன்றில் இருப்பார்கள்.
உதாரணங்கள்:
| What happened Version | Story Version |
| கீர்த்தன்யா Chalk Piece தூக்கி கீழே போட்டாங்க | கொழுப்பு இந்த பொண்ணுக்கு, யார் வீட்டு Chalk Piece தூக்கி யார் எரியறது |
| ஏன் குழந்தைக்கு உடம்பு சரியில்லை
|
எந்த ஜென்மத்துல நான் என்ன பாவோம் செய்தேனோ
|
| விபத்து நடந்துடுச்சி
|
இந்த சனி பகவான் உக்கிரத்துல பார்த்துகிட்டு இருக்கார் |
மனுஷ வாழ்க்கையிலே அவனுக்கு பிரச்னை வருவது, அவனுக்கு நடக்கிற சம்பவங்களால வருதா, இல்ல இந்த மனசு கற்ற கதையால வருதா ?
சிலர் What happened சொன்னாங்க … இதை சொன்ன நீங்க எல்லாம் லூசு
சிலர் Story சொன்னாங்க … இதை சொன்ன நீங்க எல்லாம் அரை லூசு
சிலர் 50:50 சொன்னாங்க … இதை சொன்ன நீங்க எல்லாம் முழு லூசு
மூணாவதா ஒரு உலகம் இருக்கு … அது தான் உண்மை உலகம். தான் நினைச்சது எல்லாம் உண்மைன்னு நம்புறது தான் காரணம்

உதாரணங்கள்:
திவ்யா பாரதி நடிகை, பணம், புகழ் அழகு ஆகிய எதுவுமே குறை இல்லை. காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டாள்… இதுக்கு என்ன காரணம் ?
காதல் தோல்வி = What Happened
அந்த காதலனை தவிர வேற யாரும் தனக்கு கிடைக்கமாட்டானு நினைச்சது = Story
நினைச்சதை உண்மைன்னு நம்பினது தான் உண்மையான காரணம் = Truth
Her poor emotional response to the situation led to her demise
இன்னொரு உதாரணம் ,
W.Mitchel, 28 வயது (1971 வருடத்தின் போது) பைக்கில் போகும் போது, பெட்ரோல் மூடி சரியா இல்லாததால் விபத்தில் தீ விபத்து ஏற்பட்டு 65% உடம்பு தீக்காயம் ஏற்பட்டது, பிறகு 4 வருடம் கழித்து விமானம் ஓட்டும் பொழுது முதுகு தண்டு பாதிக்கப்பட்டு, இடுப்புக்கு கீழ் உணர்ச்சி இல்லாமல் சக்கர நாற்காலிக்கு தள்ள பட்டார் .. இவரு இன்று (75 வயது) ஒரு கோடீஸ்வரன் ….
His emotional response to the situation was great.
நம்முடைய குழந்தைகளுக்கு ஏற்படும் 90% பிரச்சனைகள் வெறும் கதைகளே
Analogies using Specs …
- சின்ன வயசுல ஊர்ல இருந்த வந்த எங்க அத்தை பெரிய பொண்ணு கலர் கம்மி, சின்ன பொண்ணு கலர் நல்லா இருக்கு …நான் அழகு இல்லைங்கிற தாழ்வு மனப்பான்மை எனக்குள்ள வந்துடுச்சு. நான் யாரை பார்த்தாலும் இனிமே இந்த கண்ணாடியோட தான் அவங்களை பார்ப்பேன் ….
- நான் 8 வது படிக்கும் பொழுது முதல் காதல் வந்தது, 11 வது படிக்கும் பொழுது முடிந்தது. நான் எழுதிய காதல் கடிதத்தை எல்லோரிடமும் காண்பித்தான் .அன்று முதல் இந்த ஆம்பளைகள நம்பாதேனு முடிவு பண்ணேன், எதோ அவன் தான் ஒட்டுமொத்த ஆம்பளைகளின் பிரதிநிதி மாதிரி. இதை நான் மாற்றி கொள்ளும்பொழுது எனக்கு 32 வயது.
- எனக்கு போலியோவால் பாதிக்கப்பட்ட தங்கை இருக்கிறாள், எங்க அப்பா சீட்டு ஆட கிளம்பும் பொழுது, அவகிட்டே 10 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போவார், ஏன்னா அவள் ராசியானவள் …என்னை ராசி இல்லைனு அவர் சொல்லலை , ஆனா நான் ராசியில்லாதவனு மனசு முடிவுபண்ணிடுச்சு
- எனக்கு வயது அதிகம் ஆகியும் குழந்தை பிறக்காதனால், கிராமத்து பாட்டிங்க என்னை எதையும் தொட சொல்லாதீங்கன்னு சொன்னாங்க …. கல்யாணம்னா சிறப்பு, உண்மையிலே அது அப்படி இல்லை ..
- காசு ரொம்ப முக்கியம், சொந்த வீடு கட்டுலேனா வாழ்க்கையே தண்டம். எனக்கு சொந்த வீடு இல்லை .
- என்னமா இவ்வளவு குண்டா இருக்கியே
- என்னமா மூஞ்சி இவ்வளவு தொங்குது
இது எல்லாமே நிஜமா ….??
நீ குண்டா இருக்கிற, நீ முதல ஒல்லியா மாறு, நான் அப்புறம் என் பார்வையை மாத்திக்கிறேனு சொல்றது எவ்வளவு முட்டாள்தனம் !
We are expecting the reality to change.
சூழ்நிலைக்கும் மனசுக்கும் சம்பந்தமே கிடையாது … பிரச்சனை சூழ்நிலை கிடையாது. உலகம் தெரியணும்னா நீங்க போட்டுக்கிட்டு இருக்கிற மாயக்கண்ணாடிய கழட்டனும்.
She asked all of us to stand up, the meet 2-3 people and speak about the point that struck the most.
இருக்கிறதுலேயே ஜெயிக்கிறது கஷ்டம்னா சொன்னா அது என்னது ? நம்ம மனசு.. Mind Control ஏன் கஷ்டமா இருக்கு ?. ஒவ்வொருத்தர் உள்ளேயும் ரெண்டு பேர் இருக்காங்க
- அறிவார்ந்த சிந்தனை (rational thinking self)
- மனசு – மதம் பிடிச்ச யானை (power of senses)
Your disappointment or sadness is not an emotion you are feeling in every situation. It is a habitual emotional pattern. You cannot break this pattern without will power. The mistake we all do is, we try to control our mind through will power alone. But that’s not going to help. யானையை கட்டுக்குள் கொண்டு வரணும்னா தீனி போட்டு பழக்கணும். அதே போல் உங்கள் மனசுக்கு நீங்க பயிற்சி கொடுத்து பழகணும். Take one behavior and focus on that for next 3 months or so, to change your emotional response. Else your mind will not come under your control.
ஒரு வீட்டை பூட்டின பிறகே நாலு வாட்டி இழுத்து பார்த்துட்டு வரோம். உங்களோட முழு வாழ்க்கையும் நீங்க வாழ்ந்துகிட்டு இருக்கிற மனசுக்கு என்ன பூட்டு போட்டு வெச்சிருக்கீங்க? அதுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்துவெச்சிருக்கீங்க.
The important thinking skill is CONTROL / NON CONTROL – For every situation, there is an aspect that you can control, some aspects you cannot control. For example, you cannot control an emotion but you can come to your senses/grip quicker which is under your control.
You cannot control other people’s behavior. It is an illusion for people to think, that all that is not under their control is some how within their control. You can control your actions which can be Loving actions, Compassionate actions or uplifting actions, it’s up to you to choose any of the above.
She made another activity where asked husband and wife to hold hands, sit close together and say “ஹா ஹாஹா எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமோ”. She expressed that she is not having enough time, also needed more participation from parents … விளங்காத விளக்கென மூஞ்சிகளை வெச்சு class எடுத்துகிட்டுருக்கேன்
இது ஒரு உடம்பு, அதுக்கு ஒரு மூளை , அதுக்கு ஒரு அறிவுத்திறன். நான் அடிக்க வருவதற்கு முன்னாடியே எங்கேயோ பார்த்துகிட்டு இருந்த கண், சட்டுனு தடுக்க வந்ததுனாக்க, இது உடலின் அறிவுத்திறனா மூளையின் அறிவுத்திறனா ?
அதே மாதிரி இந்த உலகத்துக்கு ஒரு அறிவுத்திறன் இருக்கு , அதை சிலர் இயற்கை, கடவுள்னு சொல்லலாம்.உங்களுக்கு தத்துவங்கள் (philosophy) முக்கியம். இது ஒரு அர்த்தமே இல்லாத வாழ்க்கையுனு பார்த்தீங்கன்னா, உங்களோட உணர்ச்சிகள் உங்கள் கட்டுப்பாட்டுக்கு கண்டிப்பா கொண்டு வர முடியாது. ரெண்டு இந்த உலகை நீங்க ரெண்டு வகையா நீங்க பார்க்கலாம் :
1) என்னால புரிஞ்சிக்க முடியாத ஒரு அறிவுத்திறன் இந்த பிரபஞ்சதில் செயல்பட்டுக்கிட்டுருக்கு
2) இந்த பிரபஞ்சத்துக்கு ஒரு அறிவுத்திறனும் இல்லை
அறிவுத்திறன் இல்லைனு நினைச்சீங்கனா, அதுக்கு மேல வாழ்ந்து ஒரு பயனும் இல்லை.
இந்த பிரபஞ்சம் உங்களுக்கு என்ன கொடுத்திருக்கோ அதை விட சிறப்பானது உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. உங்களுக்கு ஏற்ற சிறந்த விதியை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுத்திருக்கிறது. அதனால் உங்கள் விதியை காதலியுங்கள்.
எதோ ஒரு காரணத்தால் இந்த சூழ்நிலையை நான் அனுபவிக்கணும்னு இருக்கு, அதை நல்லது கேட்டதுனு பிரிச்சி பார்க்காம ஏற்றுக்கொள்வது சரி. உங்களோட கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பிரச்சனைகளை திருத்த முயற்சி பண்ணுங்கள், மற்றவைகளை உங்கள் விதி என்று ஏற்றுக்கொள்ளுங்கள்
என்னை பார்க்கும்பொழுது , நான் என்னை ஒரு பைக்ல கட்டப்பட்டுள்ள நாயாக பார்க்கிறேன். பைக் போய்கிட்டு இருக்கு, இந்த நாய்க்கு எடுக்க கூடிய முடிவுகள் என்ன …
முடுவு 1 – நான் வண்டிகூட ஓட மாட்டேனு முரண்டு பிடிச்ச, நாயோட தலை விதி என்ன ஆகும். எப்படி இருந்தாலும் வண்டி போக போகுது, ஆனா தர தரேன்னு நாயை இழுத்துகிட்டு போகும். வண்டி நிக்கும் பொழுது நாய் சின்னாபின்னமாய் நிக்கும்
முடிவு 2 – புத்திசாலி நாயா இருந்தா, வண்டியோட சேர்ந்து ஓடும் இல்லை அதுக்கு மேல ஏறி உட்காரும்.
வண்டிக்காரன்கிட்ட நீ எப்படி ஓட்டணும்னு சொல்ல கூடாது, அது போற இடத்துக்கு போகட்டும்.
எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற சுதந்திரத்தை வெச்சு, என்னை நல்லா மாத்திக வேண்டியது என் கையில இருக்கா இல்லையா ?
நான் என்னோட விதியை காதலிக்கும் நாய் ..எனக்குள்ள இருக்கிற சந்தோஷத்தை யாருமே திருடமுடியாது, இல்லைனா நான் என்னை பற்றின விஷயங்களை நான் வெளிப்படையா சொல்லி இருக்க மாட்டேன். நீங்க என்னை பத்தி சொல்ல கூடிய வார்த்தை, என் மனசை தாக்க கூடிய சக்தி இருக்குனு நான் நினைச்சேன்னா, நான் உங்களை பார்த்து பரிதாபம் தான் படுவேன். உங்களையோ, உங்கள் குழந்தையையோ யாராவது புண்படுத்தினால், அவங்களை பார்த்து பரிதாபப்படுங்க.
உங்களால கட்டுப்படுத்தமுடியாத ஒரு வியாதியோ / குறைபாட்டை பற்றி நீங்க நினைச்சு நொந்து போக வேண்டியது இல்லை. எவ்வளவு தூரத்துக்கு சுதந்திரம் இருக்கோ, அவ்வளவு தூரம் அனுபவிச்சுக்கோங்க, மீதி எல்லாம் விதியை காதலி.
Next activity, where she asked husband and wife to face each other, look at each other’s eyes with love… Music starts playing (michael jacksons – we are the world) and say … “ I shall not criticize you, I shall not accuse you, I will try to re-create playful moments inspite of the challenge we are facing, Lets not make our entire life about this challenge. Lets take time to listen to ourselves, show some love and some time aside for ourselves. Lets love our fate and make it a Great one.”
Holding each other hands, the couples were asked to stand up and hug, take a deep breath… think of a moment where you are very happy … take a deep breath .. think about the moment where you are thankful .. Make a decision .. Take an oath, to be your best … Make a commitment, I will make my family a better place …Lets take small step in the direction, we can control.
Open your eyes and go around the hall and distribute 5 hugs …each lasting min 20 secs..
A big thank you was expressed by her, followed by a small momentum …With that the program came to an end …(of course with a selfie!)
Regards,
Saranya and karthik
karthiksaranyaparents@gmail.com