சிறப்பு குழந்தையுடைய தாயின் அனுபவம் – வாணி பட்டுமணி

Hi All,

The below post is related to a topic which was part of the Conference / Workshop organized by Vasantham. Below are the details of the session:

Conference – Workshop cum conference on Best Practices in the rehabilitation of individuals with special needs
Topic – Experience of a Parent with special needs child
Date – 18th March 2023   17:00 PM
Mode of Presentation – Offline Venue – Sengai Meenakshi Mahal, Mogappair, Chennai – 37
Speaker –  Mrs.Vani Pattumani (Name not sure)

Below are the points shared in the presentation: (in Tamil)

இங்கே வந்து இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப அனுபவம் வாய்ந்தவங்க, ரொம்ப படிச்சவங்களா இருக்கீங்க , உங்களுக்கு முன்னாடி எனக்கு என்ன பேச தெரியும்னு என்ன கூப்பிட்டுருக்காங்கனு தெரியலை, ஒரு தாய் உள்ளதோடு நான் பேசுவதை கேட்டுக்கொள்ளுங்கள் .

நான் வாணி பட்டுமணி, திண்டுக்கல்லே இருந்து வந்துகிட்டு இருக்கேன் . ஒரு நடுத்தர குடும்பம், எங்கள் திருமணம் உறவுல நடந்தது. எங்க மாமாவும், அம்மாவும் கூட பிறந்தவங்க , என் மாமியாரும் அப்பாவும் கூட பிறந்தவங்க , அதனாலே எந்த பிரெச்சனைனு நாங்க எங்க போனாலும் இதை ஒரு காரணமா சொல்லிடுவாங்க.
எனக்கு அஞ்சு வருஷத்துல அஞ்சு தடவை கரு கலைஞ்சிருக்கு , இதுக்கெல்லாம்  காரணம் நான் சொந்தத்துலே கல்யாணம் பண்ணிக்கிட்டது தாணு எல்லா  டாக்டரும் சொல்லிட்டாங்க .
என்னோட பையன் பிரவீன் ராஜ், அவர் ஓரு Special Child, அவர் அப்படி இருக்கிறதுக்கு காரணமும் நான் சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிட்டது தான் சொல்லிட்டாங்க   .

மூன்று வயது வரைக்கும் என் மகன் சாதாரணமாக தான் இருந்தான். ஏற்கனவே ஐந்து முறை கரு கலைந்ததாலே, இவன் என் வயத்துல இருக்கும் பொது CMC Vellore அட்மிட் ஆகி, டெலிவரி வரைக்கும் டிரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருந்தேன். இவன் பிறந்ததை ரொம்ப கொண்டாடினோம். அபோழுது எனக்கு டைரி எழுதும் பழக்கம் இருந்தது, இவன் மூன்று வயது ஆகிற வரைக்கும் நான்  இவனை பத்தி எல்லாம் எழுதிவெச்சிருந்தேன் . இது இவன் Milestone Timelineல achieve பன்னிருக்கானான்னு பின்னாடி பார்க்க உதவியது .

இரண்டு வயசுலே Bed Time story சொன்னா நல்லா புரிஞ்சிப்பாண், அதுல சொன்ன விஷயங்களை பத்தி பேசுவான்.

அவனை பள்ளிக்கூடத்துல சேர்த்தோம் . எங்களூடையது பெரிய குடும்பம், அவன் சொந்தகார பிள்ளைகளோடு பள்ளிக்கூடம் போவான், வருவான், நான் அப்போ இரண்டாவது உண்டாகி இருந்ததால நாங்க எதுக்கும் ஸ்கூலுக்கு போனது இல்லை . அவனுக்கு பள்ளிக்கூடத்தில ரொம்ப கெட்ட அனுபவங்கள் நடந்திருக்கும் போல, முதல பள்ளிக்கூடம் போக மாட்டேன்னு சொன்னான், அப்புறம் அழ ஆரம்பிச்சான் , பள்ளிக்கூடத்தின் வற்புறுத்தலின் பேரில் அவனை பள்ளிக்கூடம் அனுப்புவதில் இருந்து நிறுத்தினோம் . இந்த கசப்பான அனுபவத்தால் , அவனுடைய திறன் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கு.

யூகேஜி பாடம் எல்லாம் அவனே ஒத்தாசை இல்லாம படிப்பான், எழுதுவான் ..அது எல்லாம் குறைய ஆரம்பிச்சிது, படித்தது எல்லாம் மறக்க ஆரம்பிச்சான், எழுத முடியாமல் போனான், இது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இவன் கொஞ்சும் Abnormala இருக்கான்  போல தெரியுதுன்னு சொன்னா, வீட்டுலே யாரும் ஒதுக்குலே, குடும்ப மருத்துவரும் (எங்கள் சொந்தக்காரர்) ஒத்துக்கொள்ளவில்லை . எல்லோருக்கும் புரிய வைக்க முடியாத சிரமம் எனக்கு . நாளாக நாளாக இது அதிகம் ஆச்சு , அதுக்கு அப்புறம் எதோ எதோ டாக்டர் கிட்டே போனோம் .. Neuro, Psychologist, Psychiatrist,Accupressure, Homepathy, Allopathy… எனக்கு ஒன்னுமே புரியலை

(இந்த நேரத்தில் அவங்க குரல் தழுத்தது, அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு , அவர் பேச தொடர்ந்தார் )

நாங்க ஒரு நடுத்தர வர்க்க குடும்பம், பண வசதி பெருசா கிடையாது , ரொம்ப கஷ்டப்பட்டோம் அந்த நேரத்துல. இதை தாண்டி நிறைய அவமானங்கள் வேறு. 

இவனுடைய பிரெச்சனைகளை ஒன்று ஒன்றாக சொல்ல சொல்ல  இவனுக்கு  கொடுக்கிற மாத்திரைகளின் எண்னிக்கை ஏறிக்கொண்டே போனது . ஒரு கால கட்டத்துல  இவனுக்கு ஒரு வேளைக்கு பதிமூன்று மாத்திரைகள் கொடுத்திருந்தோம் . மாத்திரை சாப்பிட்ட அப்புரும் பல நேரம் மயங்கி விழுந்திடுவான் , அந்த நேரம் அவன் மூக்கிலே நான் கை வெச்சி பார்ப்பேன் , மூச்சு வருதான்னு… இந்த ஒரு நிலைமை எந்த ஒரு தாய்க்கும் வர கூடாது

முழிச்ச அப்புரும் அடிப்பான், கடிப்பான். இவனை நான் இங்க கூட்டிட்டு வரும்போது ஒரு மிருகமா தான் இருந்தான். ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம்.

(இந்த நேரத்துல அவங்களால பேச முடியலை. உணர்ச்சியும் அழுகையும் அவங்களோட வாயை அடைச்சிருச்சி.)

இவங்க முதல எல்லாம் மாத்திரைகளும் தூக்கி எரிஞ்சாங்க. ஒரு  வாரம் இங்கேயே தங்கி அவன் எப்படி இருக்கானு பார்க்கலாம்னு இருந்தோம், ஆனா ரெண்டு நாளிலேயே இவன் இங்கே பழகிட்டான், நீங்க வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க. இன்னைக்கு அவனால ஒரு பாட்டோட முதல் வார்த்தையை சொன்னா,  அவனால  முழு பாட்டு பாட முடியும். தெருவில் நடக்கும் பொழுது என்னை கைய புடிச்சி பத்திரமா கூட்டிட்டு போறான் . இந்த அளவுக்கு  அவன் வருவேன்னு நான் நினைக்கலே

தெரபி அப்படிங்கிற ஒரு கோணத்தை எங்களுக்கு மருத்துவர்கள் கூட சொல்லல , இது தான் எங்களுக்கு பெரிய பிரச்னையா அமைந்தது.

சென்னை மாதிரி ஒரு ஊருலே இதை பத்தி எல்லோருக்கும் தெரியுது, எங்களை பொறுத்த வரைக்கும் Mental illness னா  தெருவிலே திரியார்ங்க இல்லையா அவங்களை தான் எங்களுக்கு தெரியும் வேற ஒன்னுமே எங்களுக்கு இதை  பத்தி தெரியாது .  இதை நாங்க புரிஞ்சிக்கிறதிற்க்குள்ளேயே எங்களுக்கு வயசு கூடிடுச்சி.

என்னோட ஆதங்கம் என்னனாக்க நம்மள மாதிரி நிறைய பெற்றோர்கள் இருக்காங்க . அவங்களுக்கு தெரபிய அப்படிங்கிற ஒரு பக்கம் இருக்கிறது என்கிற விஷயம் reach ஆகணும். இங்கே வந்து நான் நிறைய கத்துக்கிட்டேன் . இப்போ அவன் ஒரு  மூலையோட உள்ள குழந்தையை இருந்தா கூட, அவன் சாப்பிடறது, தூங்கிறது எல்லாத்துக்கும் அவனுடைய ஒரு மூளை மட்டுமே வேலை செய்யும் , இங்கே அவனை சாப்பிட வைக்க, தூங்க வைக்க, பயிர்ச்சி கொடுக்க பல குழுக்கள், பல பேருடைய மூலைகள்  உதவுவதை நினைக்கும் பொது ஆச்சரியமா இருக்கு.

இப்போ நான் ஒரு பல்லத்துலே இருந்து ஒரு சமத்தளத்துக்கு வந்திருக்கேன் , இன்னும் உயர உயர போவேன் கண்டிப்பா !!!

இந்த பேச்சின் பொழுது எனக்கு முன் வரிசையில் அமர்ந்து இருந்த ஒரு சிறப்பு குழந்தையிடம் இருந்து ஒரு முனங்கல் சத்தம் … அவர் தான் அந்த பிரவீன் ராஜ் … அவர் தாய் மேடையில் கண் கலங்கியது தாளாமல் இங்கு அவருக்குள் ஏற்பட்ட உணர்ச்சி ததும்பலால் ஏற்பட்ட அழுகை சத்தம் அது 

நான் பலவேறு கலந்துரைண்டர்கள் , பேச்சுகள் கலந்துள்ளேன், இது எனக்கு  ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது.

Regards,

Saranya and karthikeyan

Leave a comment